அம்மா பாரேன்….
என்னை பாரேன்
ஏன்டி…என் குட்டி…
இளைச்சி போய்ட்டே..
நல்லா சாப்பிடுடி…
அம்மா பாரேன்…
என்னை பாரேன்…
சாப்பாடு கொண்டு
வரேன்…
இருடி…
நல்லா சாப்பிடனும்….
அம்மா பாரேன்…
என்னை பாரேன்…
என்னடி சட்டை
பிடிக்கிறாப்புல
இருக்கு…
அம்மா பாரேன்..
என்னை பாரேன்..
என் ராசாத்தி…
அழகிடி நீ…
அம்மா பாரேன்..
என்னை பாரேன்…
எப்ப பாரு
தின்னுகிட்டே இருக்கா..
அம்மா பாரேன்..
என்னை பாரேன்..
தடிச்சி தடிச்சி…
கொஞ்சம் இளைச்சா
என்னவாம்…
அம்மா பாரேன்
என்னை பாரேன்…
உன்னை பார்க்கவே
பிடிக்கலே…
கொஞ்சமாவது உடம்ப
பாத்துக்க தெரியுதா..
அம்மா….
என்னா?
இப்போ பாரு
மாப்பிள்ளைக்கு
நீ
வேண்டாமாம்..
அம்மா............
நீ தானே
நிறைய சாப்பிட
சொல்லி கொடுத்தே…
இப்போ என்னை
தள்ளி வைக்கிறியே…
நியாயமா…
அம்மா…..?????
No comments:
Post a Comment