இன்று...
எனக்குள் ஒரு சிலிர்ப்பு...
இனம்புரியாத சின்ன அதிர்வு...
எதோ ஒன்று
என்னுள் படர்வதை
உணரும் வாய்ப்பு...
மெல்ல திரும்பி பார்த்தேன்...
ஒரு மழலையின் கை விரல்கள்
என் தோளிலே...
புரியாத ஓவியம் ஒன்றை
கோலங்கலாக்கி கொண்டிருந்தது..
பார்த்து சிரித்தேன்..
அதுவும் கண்களை
சிமிட்டி சிரித்தது...
பிள்ளை பெறாமலேயே
தாயானது என மனம்...
ஒரு கணம்..
கண்களை மூடி
கடவுளுக்கு நன்றி சொன்னேன்
இவ்வுலகில் என்னை பெண்ணாக்கி
இந்த அனுபவத்தை தந்ததற்கு...
This is a blog that describing all the thoughts of world that i experience from my little of eyes as the windows to my heart... please do enjoy the piece of my mind....
Friday, 20 May 2011
நீ...நான்..நிலா...
ஒரு வீட்டின் திண்ணையில்
ஒரு தாய் குழந்தைக்கு
என்னை காட்டி சோறு ஊட்டுகிறாள்..
கடற்கரையில் ஒரு காதல் ஜோடி
தம் உறவில் என்னையும் சேர்த்து கொள்கிறார்கள்..
என்னை பார்த்து
நரியும் கூட ஊளை இடுகிறது...
பேயும் பிசாசும் ஆவியும்
என் முழு தரிசனத்தை
எதிர்பார்த்து காத்திருக்கின்றன...
ஆனால் இந்த பாழாய் போன மேகம் மட்டும்
என்னை வர விடாமல் தடுக்கிறது....
நான்...
என் ஒளியால்...
மேகமே உன்னை விரட்டுவேன்..
இனி என்னிடம் வராதே..
.....நோவா....
ஒரு தாய் குழந்தைக்கு
என்னை காட்டி சோறு ஊட்டுகிறாள்..
கடற்கரையில் ஒரு காதல் ஜோடி
தம் உறவில் என்னையும் சேர்த்து கொள்கிறார்கள்..
என்னை பார்த்து
நரியும் கூட ஊளை இடுகிறது...
பேயும் பிசாசும் ஆவியும்
என் முழு தரிசனத்தை
எதிர்பார்த்து காத்திருக்கின்றன...
ஆனால் இந்த பாழாய் போன மேகம் மட்டும்
என்னை வர விடாமல் தடுக்கிறது....
நான்...
என் ஒளியால்...
மேகமே உன்னை விரட்டுவேன்..
இனி என்னிடம் வராதே..
.....நோவா....
காலம்
காலம்...
கடவுளுக்கும் மனிதனுக்கும் நடுவே
கண்ணுக்கு தெரியாத மாய ஈர்ப்பு...
காலம்..
வெகு வேகமாக சுழன்றும் கூட
தன் பாதையை விட்டு அகலாமல்
பூமியை களமாக கொண்டு நடத்தப்படும் நாடகத்தின் மணித்துளி....
காலம்..
அதி வேக ரயில் விண்கல வேகத்தில் செல்லும்போதும்
தன் தண்டவாளத்தை விட்டு அகலாமல் ஆனால்
தன் தண்டவாளத்தையும் தொடாமல் தள்ளி நின்று பயணிப்பது போல.....
காந்த ஈர்ப்பு கொண்டது...
காலம்...
கல்லுரி நினைவுகளுக்கு
கண்ணீரை நதியாக்கி
அதில் நீராட வைக்கும்...
காலம்..
கடந்து போன காதலுக்கு அவ்வப்போது
கண் வைத்து காது வைத்து
முகம் வரைந்து
முத்தம் கொடுத்து
ஒத்திகையும் பார்க்கும்...
காலம்...
உடைத்து போன உறவுகளை
ஒட்ட வைக்க எதாவது கிடைக்குமா என
அசை போட வைக்கும்..
காலம்...
நினைவுகளின் ஆழத்தை கடக்க
உணர்வு போட்ட
பௌதீக பாலம்...
-----நோவா-------
கடவுளுக்கும் மனிதனுக்கும் நடுவே
கண்ணுக்கு தெரியாத மாய ஈர்ப்பு...
காலம்..
வெகு வேகமாக சுழன்றும் கூட
தன் பாதையை விட்டு அகலாமல்
பூமியை களமாக கொண்டு நடத்தப்படும் நாடகத்தின் மணித்துளி....
காலம்..
அதி வேக ரயில் விண்கல வேகத்தில் செல்லும்போதும்
தன் தண்டவாளத்தை விட்டு அகலாமல் ஆனால்
தன் தண்டவாளத்தையும் தொடாமல் தள்ளி நின்று பயணிப்பது போல.....
காந்த ஈர்ப்பு கொண்டது...
காலம்...
கல்லுரி நினைவுகளுக்கு
கண்ணீரை நதியாக்கி
அதில் நீராட வைக்கும்...
காலம்..
கடந்து போன காதலுக்கு அவ்வப்போது
கண் வைத்து காது வைத்து
முகம் வரைந்து
முத்தம் கொடுத்து
ஒத்திகையும் பார்க்கும்...
காலம்...
உடைத்து போன உறவுகளை
ஒட்ட வைக்க எதாவது கிடைக்குமா என
அசை போட வைக்கும்..
காலம்...
நினைவுகளின் ஆழத்தை கடக்க
உணர்வு போட்ட
பௌதீக பாலம்...
-----நோவா-------
கறுப்பி
கடல் நீரின் ஆழம் அதிகரிப்பின்
புலப்படுவது கருப்பு..
என் மன நீரின் ஆழத்தினால் தான்
நான் கறுப்பி.
என்னை தொட்டால்
கருமை ஒட்டிக்கொள்ளுமாம்
நான் கறுப்பி...
கட்டெறும்பு நிறமும் கருப்பு...
விஷத்தினால்...
நான் கடித்தால்?
கருங்கூந்தலையும்
கண்ணின் கருவிழியையும்
ரசிக்கும் மாக்களுக்கு
என் நிறத்தில் புதைந்திருக்கும் ரகசியத்தை
காண பயம்...நிறத்தால் நான் பெரியவள்
சூரியனின் ஒளிக்கு நான் என்ன பயந்தவளா
நான் எதையும் பிரதிபலிக்கவில்லை
நிறத்தால்..
நானும் கருப்பு...
நோவா
சந்தர்ப்பம்
கால்வாயை தாண்டி
குடுவை நிறை பாலுடன்
ஒரு ரப்பர் மரம்..
கால்வாய் ஒரு தாவலில் முடியும் அகலம்
காலிரண்டையும் அகல விரித்து தாண்டினேன்
பெருவிரல் கரை சேராமல்
நான் கால்வாய்க்குள் விழ...
பால் என் கைவிரல் பட்ட அதிர்ச்சியில் என் மேலே விழ
ரப்பர் மரம் என்னை வெறித்து நோக்கியது...
.....
கதவு திறக்க பட
ஓர் ஆள் வெளியே
ஓர் ஆள் உள்ளே...
மாறி மாறி போக வர
கதவு முன்னும் பின்னுமாய் அசைய
நானும் அதை அணுக முயல்கிறேன்...
கரத்துக்கும் கதவுக்கும் சிறு இடைவெளி தான்
வேறொரு கை என்னை முந்தி செல்ல.. .
கதவு என் ஸ்பரிசத்தை நோக்குகிறது கை படாமல்..
......
முன்னே ஜனம் இருக்க..
பின்னே நானிருக்க...
கண் முன்னே உணவிருக்க...
அணுகினேன்...
விற்பவள் வெறுங்கையை காட்டினாள்....
என் கையிலிருந்த நோட்டு நமட்டு சிரிப்புடன்
காற்றில் அசைந்தது...அவள் கரம் சேராமல்..
.....
நாடுவோர் இன்றி நட்ட நடு ரோட்டில்
ஒரு ஒட்டு கடை...
ஓடி போய் வாங்கினேன்
குச்சி மிட்டாய்...
என் வாய்க்குள்ளே சுழல சுழல
நூலிழையில்
விட்டு போன என் சந்தர்ப்பம்
ஒட்டு மொத்தமாய்
என் நா நுனியில்...
(நோவா)
Subscribe to:
Posts (Atom)