உன்னை பார்க்கனும்
உறவை வளர்க்கனும்
விழி பார்த்து
பார்த்து
விரல் சேர்த்து
சேர்த்து
கை கோர்த்து கோர்த்து
இதழ் பட்டு பட்டு
இமை இரண்டும்
இமைக்காமல்
காதல் இசை பாடிய
காலம் மட்டும்
கானல் நீராய் மாறி
போனதேன்??
உன்னை மட்டுமே
கனா கண்ட
விழிகளிரண்டும்
நீ விட்டு போன
உணர்வை
கனவை
உறவை
நினைத்து நினைத்து
கண்ணீரின் சுனையாகி
என்னை சுருட்டி
போட்டு
வெளியே சிரித்து
உள்ளே அழுது
இரட்டை வேடமிட்டு
இதழ்களில் போலியை
தவழ விட்டு
பட்டதும்
இன்னும் வலிக்கிறது…
வலிக்கொண்டு இங்கு
நான் வாட
வேறோர் வஞ்சியுடன்
எங்கோ நீ இருக்க…
உனக்காய் நான்
வருந்த மாட்டேன்…
இச்சை தாளாமல்
நீ இட்ட இதழ்முத்தம்.
யாருமறிய நேரத்தில்
கழுத்தினிடையில்
நீ போட்ட
காதல் ரணம்…
வெறுக்க முடியவில்லை…
வெறுத்தால் என்
காதல் நிஜமில்லை..
என் நேச நிஜத்தால்
விட்டெறிகிறேன்
உன் காதலை
.
அறுந்து போன செருப்பாய்
வெறுங்காலுடன்
நடக்கிறேன்
எனக்கான வேறோர்
உலகை தேடி..
No comments:
Post a Comment