Saturday, 18 August 2012

எச்சில் எச்சம்


காதலும் வேண்டும் காமமும் வேண்டும்
விகிதம் மட்டும் வேறாய் வேண்டும்
காலத்தில் மட்டும் என் இடை கவ்வும்
இங்கிதமாய் உன் காமம் வேண்டும்
காலமெல்லாம் என் இதயம் கவ்வும்
காவியமாய் உன் காதல் வேண்டும்

கலவி கலவி என உலவி கொண்டு
கண்ட இடத்தில் உன் கருவை இழைத்தால்
காமம் மட்டுமே கற்றுணர்ந்த ஒரு உருவாய் நீ இருப்பாய்
இவளுக்கு மட்டும் உன் வித்தையிட்டு
இதயமெனும் இடத்தில் உலவினாலாயின்
இறைவன் நீ இவளுகெனவாவாய்

உச்சி முகர்ந்து பார்
உள்ளம் மட்டும் புகுந்து பார்
உணர்வை உயிராய் பார்
காமம் தெளிந்த உன்னில் காதல் புகும்
காதலித்து பார்க்க சொல்லும்
இரண்டுக்குமான வேற்றுமையை
இருவேறாய் சொல்லும்

ஒற்றையாகும்
இரட்டையாகும்
ஒன்று பலவோடு இணயும்
பல ஒன்றோடு இணையும்
வலிமிகும் இடத்திலேயும் கூடும்
வலிமிகா இடத்தையும் தேடும்
இது கலவிலக்கணம்

ஒன்றோடு ஒன்று என இருக்கும்
உயிர் வரை உரசி செல்லும்
உணர்வாய் உயிரை செரிக்கும்
ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் வகுக்கும்
உள்ளத்தில் மெல்ல ஓசையும் தரும்
இது காதலிலக்கணம்

எச்சில் இலை தின்னும்
பிச்சைகாரியும்
எச்சமில்லா உறவை தான்
எதிர்பார்ப்பாள்
பச்சையிலையை
எச்சிலாக்கி
எச்சமாய் நீ வந்து நின்றுவிடாதே
பிச்சி பேன் பார்க்கப்படுவாய்
எச்சரிக்கை....

No comments:

Post a Comment