நிகழ்ந்து போகுது…
வாழ்வின் திசையும் கூட
தடுமாறி போகுது
விழி கொண்ட ஸ்பரிசத்தை விட
விசையோடு விரல் கொண்ட ஸ்பரிசத்தில்...
முகத்தை பார்த்தும்
முழுதுமாய் இடுகையை
நோட்டம் இட்டும்
நூல் விட்டு நூல் விட்டு
நட்புக்கு அழைத்தும்
ஆரம்பிக்கும் வாழ்வு…
இருந்த இடத்திலேயே
உலகையும் மற்றவர்களையும்
அவதானிக்கும் வலிமை
பிள்ளையாருக்கும் மட்டுமல்ல...
நம் பிள்ளையாண்டானுக்கும் சாத்தியமே…
இடுகை தருமே
இல்ல விலாசம் முதல்
உள்ள விலாசம் வரை
...
விட்டு போன நட்பும்
தொட்டு போன உறவும்
தொடர்ந்து உறவாட
தொடர போகும் உறவுடன்
உற்சவமாய் கொண்டாட
போதுமே ஒரு சாட்பொக்ஸ்
சத்தமின்றியே சொற்கள்
உருவாக்கும் உணர்வை
வைத்து உருவாகும்
உறவுகள் எத்தனை எத்தனை
பிரியும் உறவுகள் எத்தனை எத்தனை
எல்லை தாண்டி
எல்லார் மனதையும்
எடை போடவும்
எள்ளி நகையாடவும்
தேவையில்லை
முகநேர் முகவரி
போதும் இனி
முக நூல் முகவரி…
No comments:
Post a Comment