கடல் நீரின் ஆழம் அதிகரிப்பின்
புலப்படுவது கருப்பு..
என் மன நீரின் ஆழத்தினால் தான்
நான் கறுப்பி.
என்னை தொட்டால்
கருமை ஒட்டிக்கொள்ளுமாம்
நான் கறுப்பி...
கட்டெறும்பு நிறமும் கருப்பு...
விஷத்தினால்...
நான் கடித்தால்?
கருங்கூந்தலையும்
கண்ணின் கருவிழியையும்
ரசிக்கும் மாக்களுக்கு
என் நிறத்தில் புதைந்திருக்கும் ரகசியத்தை
காண பயம்...நிறத்தால் நான் பெரியவள்
சூரியனின் ஒளிக்கு நான் என்ன பயந்தவளா
நான் எதையும் பிரதிபலிக்கவில்லை
நிறத்தால்..
நானும் கருப்பு...
நோவா
No comments:
Post a Comment