மார்க்கச்சையும்
மனித ஆணின்
மாண்புமிகு ஆதிக்கம் தான்
பல்லாயிர
மாதங்கள் கடந்து
மெல்ல உணர்கிறேன்.....
ஆனாலும் அணியாமலில்லை...
அதற்குள் நானா
இல்லை என்னிளில் அதுவா
என்று தான் புரியவில்லை......
This is a blog that describing all the thoughts of world that i experience from my little of eyes as the windows to my heart... please do enjoy the piece of my mind....
Thursday, 30 August 2012
Saturday, 18 August 2012
எச்சில் எச்சம்
காதலும் வேண்டும்
காமமும் வேண்டும்
விகிதம் மட்டும்
வேறாய் வேண்டும்
காலத்தில்
மட்டும் என் இடை கவ்வும்
இங்கிதமாய்
உன் காமம் வேண்டும்
காலமெல்லாம்
என் இதயம் கவ்வும்
காவியமாய்
உன் காதல் வேண்டும்
கலவி கலவி
என உலவி கொண்டு
கண்ட இடத்தில்
உன் கருவை இழைத்தால்
காமம் மட்டுமே
கற்றுணர்ந்த ஒரு உருவாய் நீ இருப்பாய்
இவளுக்கு
மட்டும் உன் வித்தையிட்டு
இதயமெனும்
இடத்தில் உலவினாலாயின்
இறைவன் நீ
இவளுகெனவாவாய்
உச்சி முகர்ந்து
பார்
உள்ளம் மட்டும்
புகுந்து பார்
உணர்வை உயிராய்
பார்
காமம் தெளிந்த
உன்னில் காதல் புகும்
காதலித்து
பார்க்க சொல்லும்
இரண்டுக்குமான
வேற்றுமையை
இருவேறாய்
சொல்லும்
ஒற்றையாகும்
இரட்டையாகும்
ஒன்று பலவோடு
இணயும்
பல ஒன்றோடு
இணையும்
வலிமிகும்
இடத்திலேயும் கூடும்
வலிமிகா இடத்தையும்
தேடும்
இது கலவிலக்கணம்
ஒன்றோடு ஒன்று
என இருக்கும்
உயிர் வரை
உரசி செல்லும்
உணர்வாய்
உயிரை செரிக்கும்
ஒவ்வொன்றுக்கும்
அர்த்தம் வகுக்கும்
உள்ளத்தில்
மெல்ல ஓசையும் தரும்
இது காதலிலக்கணம்
எச்சில் இலை
தின்னும்
பிச்சைகாரியும்
எச்சமில்லா
உறவை தான்
எதிர்பார்ப்பாள்
பச்சையிலையை
எச்சிலாக்கி
எச்சமாய்
நீ வந்து நின்றுவிடாதே
பிச்சி பேன்
பார்க்கப்படுவாய்
எச்சரிக்கை....
Subscribe to:
Posts (Atom)