தூசி படிந்து
துடைபார் யாருமின்றி
விரிசலோடு
விசனப்பட்டு பட்டு
காலங்கள் சொன்ன
கதைகளை
கணக்காய் தனக்குள்
பொதித்து
கதி கலங்கி நிற்கிறது
அந்த காலங்கடந்த
ஒரு தூண்….
அருகாமையில் இன்னொன்று..
கட்டிய புதிதில்
சாயம் என்ன
சாயாங் என்ன…
கட்டி அணைத்திட
தலை சாய்த்து உறங்கிட
கதை சொல்லிட
கவிதை பாடிட
காதல் கடிதங்களை
இடுக்கடியில் சொருகிட
கண்ணாமூச்சிக்கும்
வசதியாகிட
கண்டதனமாய் கிறுக்கல்களை
செதிக்கிட
ஆணிகளை சுருக்கென
இறக்கிட
அதன் மேல்
துண்டென
தொட்டில் என
காதுக்கு கேட்காமல்
கானம் பாடி
தூங்க வைத்ததென்ன…
செல்போன் மாட்டிய
இடத்தில்
சிக்னல் வராதா
என
இவள் சென்ற திசையை
நோக்கி
இருட்டில் அசைப்போட்டும்
இரு சாயம் போன
கிழட்டு தூண்கள்…
No comments:
Post a Comment